தாக்குதாலால் மொஜ்தபா கமேனியின் முகத்தில் மாற்றம்! அடித்துக் கூறும் அமெரிக்கா
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்க மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களில் காயமடைந்திருக்கலாம் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
பென்டகனில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஹெக்செத் இதை குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது, மொஜ்தபா கமேனி காயமடைந்திருக்கலாம் என்றும் அவரது முகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எழுத்து வடிவ அறிக்கை
ஆனால் இந்தக் கருத்துக்கு ஆதாரமாக எந்த சான்றுகளையும் ஹெக்செத் வழங்கவில்லை என்பதுடன், ஈரான் அரசும் மொஜ்தபாவின் உடல்நிலை குறித்து இதுவரை எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.

மொஜ்தபா கமேனி தனது தந்தையான அலி கமேனி பெப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டதையடுத்து ஈரானின் உச்சத் தலைவராக பதவி ஏற்றார்.
பதவி ஏற்ற பிறகு அவர் எழுத்து வடிவில் வெளியிட்ட அறிக்கை, ஈரான் அரசு தொலைக்காட்சி வாசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |