ரஷ்யா- சீனாவை ஓரங்கட்டிய ஈரான்!
ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க கூட்டு தாக்குதல்களுக்கு மத்தியில் தனித்து நின்று போராடி வருகிறது. ஆனால், அதன் நீண்டகால உத்தரவாதிகளான ரஷ்யாவும் சீனாவும் வெறும் வார்த்தை ஆதரவுடன் நிற்கின்றனர். இதுவரை இராணுவ உதவியும் இல்லை, நேரடி தலையீடும் இல்லை.
அயதுல்லா அலி கமேனியின் மரணத்துக்குப் பிறகு ஈரான் தீவிரமாக தாக்குதல்களைத் தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்யாவும் சீனாவும் "ஓரங்கட்டப்பட்ட" நிலையில் உள்ளதாக உலக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா உக்ரைன் போரில் சிக்கியுள்ளது. ஈரானுக்கு ஆழமான உதவி செய்வது அதிக ஆபத்து என்று கருதுகிறது.
சீனா மத்திய கிழக்கில் தனது எண்ணெய் வழங்கல் மற்றும் முதலீடுகளை பாதுகாக்க விரும்புகிறது. ஆனால் அமெரிக்காவுடன் நேரடி மோதலை தவிர்க்கிறது.
இந்நிலையில் ஈரான் தனது தாக்குதல்களை வளைகுடா பகுதிக்கு அப்பால் விரிவுபடுத்தி, எரிசக்தி இலக்குகளை தாக்கி வருவதோடு, ரஷ்யாவும் சீனாவும் "மத்தியஸ்தர்களாக" நிலை கொள்ள முயல்கின்ற நிலையில் மத்தியக்கிழக்கின் பதற்றம் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...