வெள்ளத்தில் மூழ்கியது கண்டி மருத்துவமனை
நேற்று (7.11)சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக, கண்டி தேசிய மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவின் (OPD) தரைத்தளத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியது.
பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்வதற்காக, மத்திய மாகாண ஆளுநர் கலாநிதி ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ இன்று (8.11)ஞாயிற்றுக்கிழமை காலை மருத்துவமனைக்கு வருகை தந்தார்.
இயல்பு நிலையை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கை
இந்த ஆய்வின் போது, மருத்துவமனை நிர்வாகத்தினரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இயல்பு நிலையை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆளுநர் பணித்தார்.

அவரது அறிவுறுத்தலைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தினரும் கண்டி மாநகர சபையினரும், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து துப்புரவு மற்றும் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
ஆளுநரின் உத்தரவு
திங்கட்கிழமைக்குள் மருத்துவமனையின் அன்றாடச் சேவைகள் வழமைக்குத் திரும்புவதை உறுதிசெய்யத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் ஆளுநர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது மருத்துவமனை பணிப்பாளர், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்: தெனியாய பகுதியில் நீரில் மூழ்கி மாயமான நால்வரில் இருவர் சடலங்களாக மீட்பு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |