வங்கக்கடலில் மீண்டும் ஒரு தளம்பல் நிலை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் வளிமண்டல தளம்பல் நிலையொன்று உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதியளவில் ஏற்படும் இந்த தளம்பல் நிலையானது நவம்பர் 13ஆம் திகதியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நவம்பர் 15ஆம் திகதியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமைநேர வானிலை அதிகாரி உதேனி வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அவதானத்துடன் செயற்படுதல்
இதனால் குறித்த கடற்பிராந்தியங்களில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (08) பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |