காவல்துறை பரிசோதகர் வருணி போகஹவத்த சேவையிலிருந்து இடைநிறுத்தம்
கொட்டவில காவல் நிலையத்தின் நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரியாகக் (OIC) கடமையாற்றிய பெண் பிரதம காவல்துறை பரிசோதகர் வருணி போகஹவத்த சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிகாவல்துறை மா அதிபர் சமிக்க விக்ரமசிங்க இந்த இடைநிறுத்தல் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மோட்டார் வாகனமொன்றைக் கொள்வனவு செய்தமை மற்றும் அதற்கான குத்தகை தவணைப் பணத்தைச் செலுத்தியமைக்கான நிதி மூலங்களை உறுதிப்படுத்தத் தவறியமை தொடர்பிலேயே வருணி போகஹவத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
அத்துடன் அவருக்குச் சொந்தமான சொகுசு மோட்டார் வாகனமொன்றும் அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டது.

மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபரொருவரால் குறித்த மோட்டார் வாகனத்தின் குத்தகை தவணைப் பணம் செலுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்ததைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |