ஜப்பானில் நிலநடுக்கம்:சுக்குநூறாக உடைந்த கண்ணாடிகள்:22 பேருக்கு காயம்
ஜப்பானின் ஷிசுவோகா மாகாணத்தின் மேற்குப் பகுதியில் இன்று (08) அதிகாலை 1:04 மணியளவில் 5.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது பூமிக்கு அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் உருவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐச்சி மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. எனினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
22 பேர் காயம்
இந்த திடீர் நிலநடுக்கம் காரணமாக ஐச்சி மற்றும் ஷிசுவோகா மாகாணங்களில் குறைந்தது 22 பேர் காயமடைந்துள்ளனர்.

கட்டிடங்களிலிருந்து பீதியடைந்து வெளியே ஓடியபோதும், படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்தும் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் இருந்த பல கடைகளின் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்து வீதிகளில் சிதறியுள்ளன. நூலகங்கள் மற்றும் கடைகளில் இருந்த புத்தகங்கள் அலமாரிகளிலிருந்து கீழே விழுந்து குவிந்துள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஷான்கன்சென் புல்லட் தொடருந்துகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குறைக்கப்பட்ட வேகத்தில் இயக்கப்பட்டுள்ளன.
அறிவுறுத்தல்
நிலநடுக்கம் ஏற்பட்ட ஷிசுவோகா மாகாணத்தில் உள்ள ஹமாோகா அணுமின் நிலையத்தில் எந்தவிதமான சேதமோ ஆபத்தோ ஏற்படவில்லை என சோதனைகளில் தெரியவந்துள்ளது.

அடுத்த சில நாட்களுக்குப் பின் அதிர்வுகள் இருக்கக்கூடும் என்று எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |