இஸ்ரேலின் புதிய பிரதமராகிறார் காடி ஐசென்கோட்: முடிவுக்கு வருகிறது நெதன்யாகுவின் ஆட்சி
இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைக்க காடி ஐசன்கோட்டுக்கு(Gadi Eisenkot) அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் அழைப்பு விடுத்துள்ளார்.
நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இந்த அறிவிப்பை ஹெர்சாக் வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் முக்கிய அரசியல் போட்டியாளரான காடி ஐசன்கோட்டை நடைபெற்று முடிந்த தேர்தலில் அந்நாட்டின் அடுத்த பிரதமராவார் என எதிர்வுகூறப்படும் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனித்து ஆட்சி அமைக்க முடியாத அரசியல்
இது தொடர்பாக இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை ஐசன்கோட்டிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை ஜெருசலேமில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெறவுள்ளது.
கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் நெதன்யாகு தலைமையிலான மதவாத தேசியவாதக் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது.
இருப்பினும், நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய அணியாக அது உருவெடுத்தது. 120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில், காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 48 ஆசனங்களையும், நெதன்யாகு ஆதரவு அணியினர் 53 ஆசனங்களையும் பெற்றுள்ளனர்.
இதனால் எந்தத் தரப்பினராலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத அரசியல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
ஹெர்சாக் நடத்திய அரசியல் ஆலோசனைகளின்போது, 66 வயதான ஐசன்கோட்டுக்கு அரபு மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இரண்டு அரசியல் பட்டியல்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனால் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் அந்தக் கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |