கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை விமானம்
அமெரிக்க போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட MV22B ரக அமெரிக்க கடற்படை விமானம் ஒன்று,இன்று (11/07) மதியம் 12.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இந்த விமானத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இதை ஒரு உலங்குவானூர்தியாகவும், விமானமாகவும் பயன்படுத்த முடியும்.
இந்த விமானத்தின் வால் துடுப்புகள் உலங்குவானூர்தியைப் போல உயர்த்தப்பட்ட நிலையில் அமைக்கப்பட்டிருந்தாலும், தேவைக்கேற்ப அவற்றை விமானத்தைப் போல முன்னோக்கித் திருப்பவும் முடியும்.
ஓடுபாதையில் ஓட வேண்டிய அவசியமில்லை
மேலும், இந்த விமானம் புறப்படுவதற்கு ஓடுபாதையில் ஓட வேண்டிய அவசியமில்லை என்றும், உலங்கு வானூர்தியை போல உடனடியாக காற்றில் உயர்த்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

இந்த விமானம், இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்குத் தெற்கே 50 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டிருந்த அமெரிக்க கடற்படைக் கப்பலில் இருந்து புறப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.
இந்த விமானம் இன்று பிற்பகல் (07) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, அமெரிக்க கடற்படைக் கப்பலில் ஏறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |