ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அமைதியின்மை : இருவர் அதிரடி கைது
அநுராதபுரம் - ருவன்வெலிசாயவுக்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் புனிதபூமி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராக பலாங்கொட கஸ்ஸப தேரர் தலைமையிலான சில பிக்குகள் கூடி சத்தியாக்கிரகம் ஒன்றை முன்னெடுத்த நிலையில் அதனை கலைப்பதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
கைது செய்யப்பட்ட இருவர்
இதன்போது அங்கு காவல்துறையினருக்கும், சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தேரர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இந்தநிலையில் சத்தியாகிரக போராட்டத்தின் போது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து அங்கு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, புனிதபூமி திட்டத்தால் பூர்விகமாக வாழும் மக்கள் எவரும் தன்னிச்சையாக வெளியேற்றப்படமாட்டார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பௌத்த மதத்திற்கு எதிரான கொள்கைகளைப் பின்பற்றுவதாகவும் புனிதபூமி திட்டத்தில் பிற மத வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் எதிர்க்கட்சிகளால் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |