ஈரானை கட்டுப்படுத்தும் புதிய நகர்வு: Iron Gate திட்டத்தை அறிமுகப்படுத்திய CENTCOM
ஈரானின் இராணுவ விநியோக வலையமைப்புகள் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் திட்டத்தில் ஒரு புதிய பணிக்குழுவை அமைத்துள்ளதாக CENTCOM தெரிவித்துள்ளது.
மேம்பட்ட ஆயுதங்கள், இரட்டைப் பயன்பாட்டுத் தொழில்நுட்பங்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்வதற்காக ஈரான் தரைவழிப் போக்குவரத்துப் பாதைகளைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுவதைத் தடுப்பதற்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
CENTCOM வெளியிட்ட அறிக்கையின்படி,
ஈரானுக்கு எதிரான இரும்புப் பிடி
“புளோரிடாவின் டம்பாவைத் தளமாகக் கொண்ட இந்தக் குழுவில் சுமார் 20 பொது மற்றும் இராணுவப் பணியாளர்கள் இடம்பெறுவார்கள்.

டாஸ்க் ஃபோர்ஸ் அயர்ன் கேட்டின் உருவாக்கம், கடலில் ஈரானுக்கு எதிரான நமது இரும்புப் பிடி முற்றுகையின் வெற்றியை வலுப்படுத்துகிறது.
அமெரிக்காவின் பல்துறை முகமைக் கூட்டாளிகளுடன் CENTCOM தனது ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது, ஆயுதத் தொழிற்சாலைகளை மீண்டும் உருவாக்குவது மற்றும் தனது இராணுவத்தை வலுப்படுத்துவது போன்ற ஈரானின் திறன்களை மேலும் கட்டுப்படுத்தும்," என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |