வேலன் சுவாமிகளின் கைது - கவலை வெளியிட்ட பிரித்தானிய எம்.பி
யாழ். நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டமை மிகவும் கவலையளிக்கிறது என பிரித்தானிய தாராளவாத ஜனநாயக் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சேர் எட் டேவி தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் சிறிலங்கா அதிபர் கலந்துகொண்ட போது நடத்தப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், சேர் எட் டேவி தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.
அரசாங்கத்தின் அச்சுறுத்தும் முயற்சி
தனது டுவிட்டர் களத்தில் இது குறித்து தெரிவித்துள்ள அவர், தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தும் அரசாங்கத்தின் மற்றொரு முயற்சியே இதுவென சுட்டிக்காட்டியுள்ளார்.
சிவில் சமூகத்தின் இந்த துன்புறுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார்.
The arrest of Velan Swamigal in Jaffna is deeply disturbing and yet another attempt to intimidate those who speak up for the rights of Tamils.
— Ed Davey (@EdwardJDavey) January 20, 2023
I've asked the Foreign Secretary to make clear to his Sri Lankan counterparts that this harassment of civil society is unacceptable.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 21 மணி நேரம் முன்
