மதவாத கருத்துக்களை வெளியிட்ட பௌத்த பிக்கு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ராஜாங்கனை சத்தா ரதன தேரரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
குறித்த உத்தரவானது இன்று (25) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதங்களுக்கு இடையில் முரண்பாடான கருத்துக்களை பரப்பினார் எனும் குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கடந்த மே மாதம் (29) ராஜாங்கனை சத்தா ரத்தன தேரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
பிடியாணை
அதனை தொடர்ந்து கடந்த ஜுலை (12)பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
குறித்த வழக்கு தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தால் நீதவான் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தேரரின் வெளிநாட்டுப் பயணத்தை தடை செய்து, குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.