ஞானசார தேரரை கைது செய்ய உத்தரவு
இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக குற்றம் சாட்டி தொடரப்பட்டுள்ள வழக்கொன்றில் குற்றவாளியாக பெயர் குறிப்பிடபட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரரை (Galagoda Aththe Gnanasara) கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவானது இன்று (19.12.2024) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் (Colombo Magistrate's Court) வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
குறித்த வழக்கில் இன்று அவர் முன்னிலையாக வேண்டிய நிலையில் வழக்கிற்கு வருகை தரவில்லை என்பதால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
கலகோட அத்தே ஞானசார தேரர் சுகயீனம் காரணமாக இன்றைய வழக்கு விசாரணையில் முன்னிலையாகவில்லை என அவர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.
எவ்வறாயினும் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |