யாழில் இறைச்சிக்காக மாடுகளைக் கடத்திய காவல்துறை உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இறைச்சிக்காக மாடுகளை கடத்தி வந்த காவல்துறை உத்தியோகத்தர் உட்பட மூவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவிலிருந்து மண்டைதீவு நோக்கி சட்ட விரோதமாக மாடுகள் கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய காவல்துறை விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றி வளைப்பின்போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
இதேவேளை கடத்திச் செல்லப்பட்ட எட்டு மாடுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள காவல்துறை உத்தியோகத்தர் தற்போதும் யாழ்ப்பாணம் தலைமை காவல் நிலையத்தில் குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |