மிரிஹான பகுதியில் கைது செய்யப்பட்டவர்களில் சிலருக்கு பிணை மற்றும் விளக்கமறியல்!
sri lanka
people
government
mirihana
By Thavathevan
தற்போது நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நுகேகொடை மிரிஹான பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் 21 பேர் தலா 100,000 ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கங்கொடவில நீதவான் முன்னிலையில் அவர்களை முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைதான மேலும் 6 பேருக்கு ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கைது செய்யப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கங்கொடவில நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி