நீதிமன்றுக்கு வந்தவர் கைது -சோதனையில் சிக்கிய பொருள்
களுத்துறை மேல் நீதிமன்ற வளாகத்துக்குள் புகையிலையை உள்ளாடைக்குள் மறைத்து கொண்டு வந்த நபர் ஒருவர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.
அளுத்கம, தர்கா நகரம், வாரபிடிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இரண்டு புகையிலை துண்டுகள்
களுத்துறை மேல் நீதிமன்ற பிரதான வாயிலில் கடமையாற்றிய உப காவல்துறை பரிசோதகர் பிரியந்த,சந்தேக நபரை சோதனையிட்ட போது 15 அங்குல நீளமுள்ள இரண்டு புகையிலை துண்டுகள் கவனமாக பொதி செய்யப்பட்டு உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிறைச்சாலைகளில் இருந்து களுத்துறை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் கைதிகளுக்கு இந்த புகையிலை கொண்டு வரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக சிரேஷ்ட காவல்துறைஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விசாரணை
சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்
தலைமையக காவல்துறை பரிசோதகர் ருவன் விஜேசிங்கவின் பணிப்புரைக்கமைய, பிரதான காவல்துறை பரிசோதகர் சாந்த நயனப்பிரியவின் வழிகாட்டலில் பிரதி காவல்துறை பரிசோதகர் பிரியந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
