இலங்கைக்கான விமான சேவைகள் விரைவில் நிறுத்தம்- வெளியான அபாய அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Flight
By Sumithiran
விமான சேவைகள் விரைவில் நிறுத்தப்படும்
இலங்கைக்கான விமான சேவைகள் விரைவில் நிறுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் துஷான் குணவர்தன அபாய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
இந்த நாட்டில் பாரிய நிலைமை ஏற்பட்டால் காப்புறுதியை செலுத்துவதில் சிக்கல் நிலை ஏற்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையர் எவருக்கும் விசா வழங்கப்பட மாட்டாது
எதிர்காலத்தில் இலங்கையர் எவருக்கும் விசா வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலையை குறைக்கலாம் என்று கூறுவது முட்டாள்தனமான கதை என்றும், புதிய முதலீட்டாளர்களை இவ்வாறு வரவிடாமல் செய்வதுடன் இங்கிருக்கும் முதலீட்டாளர்களும் நாட்டை விட்டு வெளியேறி விடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
