இலங்கைக்கு கிடைக்கவுள்ள 600 மில்லியன் டொலர்!
இலங்கைக்கு சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கிடைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணையின் இரண்டாவது தவணையை வழங்கப்பட்டதன் பின் இந்த 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டளவில் வரலாறு காணாத அளவில் இலங்கையின் பொருளாதாரம் 7.8 சதவீதம் சுருங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம்
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடனான நான்கு ஆண்டு வேலைத்திட்டத்தை ஆரம்பித்த பின்னர் இலங்கையின் பொருளாதாரம் படிப்படியாக உயர்வடைந்து வருகின்றது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய முதல் மதிப்பாய்வு அடுத்த வாரம் அங்கீகரிக்கப்படும் என எதிர்ப்பார்க்கபடுகின்றது.
மேலும், சர்வதேச நாணய நிதியம், இரண்டாவது தவணையாக சுமார் 334 மில்லியன் டொலர்கள் நிதியை வெளியிடவுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி அடுத்த நான்கு ஆண்டுகளில் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க வாய்ப்புள்ளது என வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர், நாட்டுப் பணிப்பாளர் தகாபுமி கடோனோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |