தாயகம் திரும்பிய ஆசிய விளையாட்டு சாம்பியன்கள்
சீனாவின் ஹொங்சோ நகரில் இடம்பெற்ற 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் நான்கு பதக்கங்களை வென்ற இலங்கை தடகள வீரர்கள் இன்று (11) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
இந்த வெற்றி வீரர்களை சகல மரியாதைகளுடனும் வரவேற்பதற்காக அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், மாணவர்கள், வளல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரியின் பணியாளர்கள், சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் என பலரும் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
நான்கு பதக்கங்கள்
பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்ன இலங்கைக்காக ஒரு தங்கப் பதக்கத்தையும், பெண்களுக்கான ஈட்டி எறிதலில் டில்ஹானி லேகம்கே இலங்கைக்காக ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் முதலில் பெற்றுக் கொடுத்தனர்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4x400 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் தலா ஒரு வெண்கலப் பதக்கம் வீதம் இரண்டு வெண்கலப்பாதகங்களும் இலங்கைக்கு கிடைத்திருந்தது.
அதன்படி ஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மொத்தம் நான்கு பதக்கங்களை ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் இலங்கை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.