புதிய அரசியல் சீர்த்திருத்தங்கள் : ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
சட்டத்தின் ஆட்சியையும் மரியாதையையும் மீட்டெடுக்க விரைவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் (Anura Kumara Dissanayake) கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையை ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு (Asian Human Rights Commission) விடுத்துள்ளது.
ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் பசில் பெர்னாண்டோ எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீர்திருத்த செயற்பாடு
இந்தநிலையில், நாட்டில் சட்ட சீர்திருத்த செயற்பாடுகளை முன்னெடுப்பதில் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கியமான மூன்று விடயங்கள் தொடர்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனடிப்படையில், உயர் நீதிமன்றங்களில் கடுமையான குற்றவியல் வழக்குகளை தினசரி விசாரணை செய்தல், இலஞ்சம் மற்றும் ஊழலை கட்டுப்படுத்தும் சட்டங்களை அறிமுகம் செய்தல், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சீர்திருத்தம் ஆகியன இந்த விடயங்களில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |