பேரதிஷ்டத்தின் உச்சத்திலுள்ள ராசியினர் இவர்கள் தான் ஆனால் சிம்ம ராசியினருக்கு- இன்றைய ராசிபலன்
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம்.
அந்த அமைப்பே எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இந்து மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகிறது.
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புது உற்சாகம் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய பலம் அறிந்து செயல்பட கூடிய இனிய நாளாக இருக்கும்.
தேவையற்ற பேச்சு வார்த்தைகளை தவிர்ப்பது பலமாக அமையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையக் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவியிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மேலும் வலுவாக கூடும் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்துங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சோதனைகள் வரலாம்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் இருக்கும்.
கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து கிடைக்க வேண்டிய விஷயங்கள் தாமதமாகலாம். ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு நண்பர்களுடைய ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த திருப்பங்கள் குழப்பத்தை ஏற்படுத்தலாம். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனம் தேவை. பூர்விக சொத்து பிரச்சனை மேலோங்கி காணப்படும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எதிர்பார்ப்புகள் பூர்த்தியாவதில் இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் வருவது வரட்டும் என்று இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கூடுதல் உழைப்பு தேவை.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருக்கும் குழப்பங்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களுக்கு பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டை, சச்சரவுகள் வந்து மறையும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் இணக்கம் தேவை. போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மற்றவர்கள் பாராட்டும் படியான நிகழ்வு நடை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்டநாள் இழுபறியில் இருந்த வேலைகளும் சுலபமாக முடிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கடமையில் கூடுதல் அக்கறை ஏற்படும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கக் கூடிய அமைப்பு என்பதால் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டு. கணவன் மனைவியிடையே அனுசரித்து செல்வது நல்லது.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை காணப்படும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்து கொள்ள வேண்டிய அமைப்பாக இருக்கிறது. உங்களுக்கு எதிராக எவ்வளவு பெயர் செயல்பட்டாலும் அசராமல் முன்னேறிக் கொண்டே செல்வீர்கள்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இறைவழிபாட்டில் அதிக ஆர்வம் காணப்படும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எண்ணங்கள் நேர்மறையாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு பெருகும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ள நீங்கள் குறுக்கு வழியை நாடாமல் நின்று நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்நாளை நண்பர்களுடன் செலவிடக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பதவி உயர்வு கிடைப்பதில் இருந்து வந்த தடைகள் அகலும். ஆரோக்கியம் சீராகும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீண்ட கால பிரச்சனை தீரும் இனிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்வது நல்லது.
பயணங்கள் அனுகூல பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நடப்பவை யாவும் புரியாத புதிராக இருக்கும். தேவையற்ற விசயத்தில் இருந்து விலகி இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.