அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 4 ராசியினர்! ஆனால் மீன ராசிக்காரர்களுக்கு? இன்றைய ராசி பலன்கள்
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம்.
அந்த அமைப்பே எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இந்து மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகிறது.
இதன்படி, மங்கலகரமான சுபகிருது வருடம் வைகாசி 15ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (2022ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி) இன்றைய நாளுக்கான, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,
மேஷம்
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்டநாள் வேண்டுதல்கள் பலிக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. நடக்கவில்லையே என்று நினைத்த காரியம் ஒன்று நடக்கும்.
கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நன்மையான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தர்கள் தங்களுடைய தனித்துவத்தை உணர்வீர்கள்.
ரிஷபம்
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை நினைத்தபடி நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வேலை கடுமையானதாக இருக்கும். மற்றவர்களுடைய வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி இருக்கும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற வம்பு வழக்குகள் ஏற்படாமலிருக்க சமயோசித புத்தியுடன் செயல்படுவது நல்லது.
மிதுனம்
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு புதிய பொருள், பொருள் சேர்க்கை ஏற்படும். தொழில்மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
உத்தியோகத்தில் உள்ளவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. மறைமுக எதிரிகளின் தொல்லை ஒழியும்.
கடகம்
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வெற்றியை நிர்ணயிக்கக் கூடிய நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் அதை திறம்பட சமாளிக்க கூடிய வல்லமை இருக்கும்.
உத்தியோகத்தர்களுக்கு அதிக அலைச்சல் ஏற்பட்டாலும் பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டு. ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் அமைதியை கடைபிடிப்பது நல்லது. உங்கள் வாயால் தேவையில்லாத பிரச்சனை வரலாம்.
உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்ததை அடைவீர்கள். ஆரோக்கியத்தில் உள்ள பாதிப்புகளை உடனுக்குடன் கவனிப்பது நல்லது.
கன்னி
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய பொறுப்புகள் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் மூத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.
சுயதொழிலில் இருப்பவர்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற போராடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும்.
துலாம்
துலாமில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய நபர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்களுடன் இருக்கும் நீண்ட நாள் நண்பர்கள் உங்களுக்கு எதிராக செயற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
சுயதொழிலில் எதிர்பார்ப்பதை விட லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சிறு சிறு மன வேறுபாடு ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த மோதல்கள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். இன்று செய்த புண்ணியம் இன்று உங்களுக்கு பலனாக கிடைக்கும்.
வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்து முடிப்பதில் இடையூறுகள் ஏற்படலாம் எனவே கூடுதல் கவனம் தேவை.
தனுசு
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புத்துணர்ச்சியுடன் காணப்பட கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புணர்வு அதிகம் தேவை. தேவையற்ற மூன்றாம் நபர்களுடைய விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
கணவன் - மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிரிந்து சென்ற உறவுகள் உங்களைத் தேடி வரலாம்.
மகரம்
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சவாலான வேலையையும் சுலபமாக முடிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தந்தை வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம்.
புதிய முதலீடுகளில் ஈடுபட செய்யும் யோகம் உண்டு. கணவன் மனைவி இடையே எதிர்பாராத புரிதல் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளுடைய ஆதரவு தேவை என்பதால் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
கும்பம்
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் புதிய உத்திகளை கையாளுவதில் கவனம் செலுத்துவது நல்லது.
கணவன் - மனைவி இடையே வார்த்தையில் இனிமை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதையும் சாதிக்கக் கூடிய தைரியம் இருக்கும்.
மீனம்
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் எடுக்கக்கூடிய ஒவ்வொரு அடியிலும் கவனம் தேவை. எவ்வளவோ விமர்சனங்கள் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடக் கூடிய சூழ்நிலை நிலவும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஆடம்பர செலவுகள் ஆபத்தை கொடுக்கும் என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டு.