ஆடிப்பிறப்பில் காத்திருக்கும் ராஜயோகம்! மகிழ்ச்சியில் திழைக்கப்போவது யார் தெரியுமா..! இன்றைய ராசிபலன்
ஆடிப்பிறப்பு
நாளை ஆடிப்பிறப்பாகும். தமிழரின் பாரம்பரிய ஆடிக்கூழுடன் ஆடிப்பிறப்பானது கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத்தில் இருந்து தட்சிணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி மாதம் வரை ஆறு மாதம் தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவு நேரமாகும். இந்த மாதத்தில்தான் சந்திரனின் வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்கிறார்.
இந்த ஆண்டுக்கான ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமையில் பிறக்கிறது. ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது.
பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதம் ஆடி மாதம். ஆடி மாதத்தில் சிவனின் சக்தியைவிட அம்மனின் சக்தி அதிகமாக இருக்கும் என்று கூறுவார்கள்.
பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன் ஆடிமாதம் அம்மனின் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். எனவே தான் இந்த மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.
இன்றைய ராசிபலன்
இத்தகைய தன்மைகளைக் கொண்ட இன்றைய நாளுக்கான (சுபகிருது வருடம் ஆடி மாதம் 01 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை - 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி) ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
ஆடிப்பிறப்பான நாளிலே, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கிறது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்,
