மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இன்று முதல் வங்கி கணக்குகளுக்கு வரும் அடுத்த கட்ட பணம்
அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளுக்கான ஒகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று (01) முதல் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்க்கும் பணிகள் நிறைவடைந்ததன் பின் நவம்பர் 6ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை 'அஸ்வசும வாரம்' ஒன்று நடைமுறைபடுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகனளை தற்போது தயார்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கொடுப்பனவுகள்
மேலும் இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது, “1,365,000 பயனாளிகளுக்கு 8.5 பில்லியன் ரூபாயை வங்கிகளுக்கு வழங்க நிதி அமைச்சகம் மற்றும் கருவூலம் ஏற்பாடு செய்துள்ளது.
அடுத்ததாக நவம்பர் மாதத்திலேயே மற்றொரு கட்டணத்தைச் செலுத்துவோம் என்று நம்புகிறோம். அந்த கட்டணம் செப்டம்பர் மாதத்துடன் தொடர்புடையது.
மேல்முறையீடுகள் மற்றும் போராட்டங்கள், அடையாள அட்டையில் உள்ள பிரச்சினைகள் அல்லது வங்கிகளில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் ஜூலை முதல் டிசம்பர் வரையான அனைத்து கொடுப்பனவுகளும் வழங்கி வைக்கப்படும்” என கூறியுள்ளார்.