2024 இல் மின் கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
Sri Lankan Peoples
Ceylon Electricity Board
Sri Lanka Electricity Prices
Kanchana Wijesekera
By Dhilak
அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி மின் கட்டணம் திருத்தம் செய்யப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (31) அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒக்டோபரில் மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டதால், ஜனவரியில் திருத்தம் செய்யப்படாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிரேரணை
ஒவ்வொரு 03 மாதங்களுக்கு ஒரு முறையும் மின்சார கட்டணத்தை திருத்தும் பிரேரணைக்கு அமைச்சரவை நேற்று(31) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஆனால், ஒக்டோபரில் திருத்தம் செய்யப்பட்டதால், அடுத்த ஜனவரி முதல் திகதியில் திருத்தம் செய்வதற்குப் பதிலாக, அடுத்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் திருத்தம் செய்யப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.