இலட்சங்களை கடந்துள்ள அஸ்வெசும நலன்புரி திட்ட மேன்முறையீடுகள்
Shapoorji Pallonji
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Pakirathan
அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் இதுவரையில் நான்கு இலட்சத்து 89 ஆயிரத்து 953 மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனை நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் டீ.விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் இதுவரையில் 6 ஆயிரத்து 783 ஆட்சேபனைகள் கிடைக்கப் பெற்றுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
ரணிலின் அறிவித்தல்
அதேசமயம், எவரையும் புறக்கணிக்காத வகையில் 'அஸ்வெசும' திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அதிபர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
