ஏறாவூரில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை சுட்டுக்கொன்ற கொடூரம்! 2004 - 2009 இல் 60 கொலைகள்
கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய நாடுகளில் வழங்கப்படும் தண்டனைகளை போல பல கொடூரமான சம்பவங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள விடயங்கள் எமது ஊடகப்பிரிவின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் அம்பலமாகியுள்ளது.
இஸ்லாத்தின் ஷரியா சட்டத்தின்படி, திருமணத்திற்கு பின்னரான உறவுகள் தமது நடைமுறைக்கு எதிரானது என கூறி அவர்களின் கழுத்தில் கயிற்றை கட்டி இறுக்கி தண்டனை வழங்கிய சம்பவம் அறங்கேரியுள்ளது.
மேலும், சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சம்பவ இடத்திலேயே துப்பாக்கியால் சுட்டுக்கொள்ளப்பட்ட அவலமும் அங்கு இடம்பெற்றுள்ளமை மனதை பதைபதைக்க வைக்கிறது.
முன்னதாக கிழக்கில் அயுத குழுக்கலாக செயற்பட்டதாக கூறப்படும் கலீல் போன்ற நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த கொடூரங்களில் பலர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தலீபான்களை போன்ற தனி உடையனிந்தும், அவர்கள் ஷரியாசட்டத்திற்கு உள்வாங்கப்பட்டவர்கள் எனவும் தனி அடையாளங்கள் கட்டுப்பாடுகள் உறுவாக்கப்பட்தாகவும் அறியமுடிகிறது.
இதன்படி 2004 ஆம் ஆண்டுக்கும், 2009 ஆம் ஆண்டுக்கும் இடையில் 60ற்கும் மேற்பட்ட கொலைகள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டும் இந்த காணொளி மேலும் பல அதிர்ச்சி பின்னணிகளை எடுத்துறைக்கிறது...
