யாழில் கிணற்றடியில் துணிகளை துவைத்துக்கொண்டிருந்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்
யாழில் கிணற்றடியில் துணிகளை துவைத்துக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சுன்னாகம் - சுப்பிரமணியம் வீதியைச் சேர்ந்த சிவஞானம் சிவகுமார் (வயது 58) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
அவர் இன்று மதியம் கிணற்றடியில் துணிகளை துவைத்துக்கொண்டிருந்தார். இதன்போது திடீரென மயங்கி நிலத்தில் சரிந்துள்ளார்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற மகன்
இதனை அவதானித்த அவரது மகன் அவரை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை சுன்னாகம் காவல்துறையினர் நெறிப்படுத்தினர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
