அவலத்தின் உச்சம் - செம்மணியில் மீட்க்கப்பட்ட சிறுமிகளின் சிறுவளையல், கால்சங்கிலி
யாழ். (Jaffna) செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது 46 சான்றுப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினமும் அகழ்வுப்பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளன.
செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து நேற்று மாத்திரம் 11 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சிறுவர்களின் பாடசாலைப் புத்தகப் பை
சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் முதலாம் கட்டமாக 9 நாள்கள் இடம்பெற்ற அகழ்வு மற்றும் இரண்டாம் கட்டமாக 21 நாள்கள் (நேற்று வரை) இடம்பெற்ற அகழ்வில் 46 சான்றுப்பொருள்கள் அடையாளம் காணப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
இதுவரை சிறுவர்களின் பாடசாலைப் புத்தகப் பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை, காற்சங்கிலி, சிறு வளையல், இரும்புக் கட்டிகள், போத்தல், பாதணிகள், சிறுமிகளின் ஆடைகள், கற்கள், பிளாஸ்டிக் மாலை உள்ளிட்ட 46 சான்றுப்பொருள்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
