அல் - நஸ்ர் முகாம் மீது தாக்குதல்! ஹவுதி அமைப்பு வெளியிட்ட அறிக்கை
யேமனின் இடைக்காலத் தலைநகரான ஏடன் நகரில் அமைந்துள்ள அல்-நஸ்ர் இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
தெற்கில் உள்ள ஏடன் துறைமுக நகரில் இருக்கும் அல்-நஸ்ர் முகாமையும், கடற்படைத் தளத்தையும் குறிவைத்துள்ளதாக ஹவுதி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுகிறது.
ஹவுதி அமைப்பானது ஏடன் நகரை பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் குறிவைத்ததாக யேமன் தகவல் அமைச்சகம் தெரிவித்திருந்தது.
பயண ஆலோசனை
இந்நிலையில், அதிகரிக்கும் அச்சுறுத்தலை காரணம் காட்டி, அமெரிக்க வெளியுறவுத்துறை வளைகுடா மற்றும் பரந்த மத்திய கிழக்கு முழுவதும் பயண ஆலோசனைகளைப் புதுப்பித்துள்ளது.

இந்தப் பாதுகாப்பு எச்சரிக்கைகள் சவூதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபு அமீரகம், ஈராக், லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளை உள்ளடக்கியுள்ளன.
சவூதி விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் வசதிகள் மீது ஹவுதி கள் பல வாரங்களாக நடத்தி வரும் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |