ஹமாஸ்போன்று இந்தியாவிலும் தாக்குதல் : பிரதமர் மோடிக்கு மிரட்டல் (காணொளி)
இந்தியா தொடர்ந்தும் பஞ்சாப்பை ஆக்கிரமித்தால் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதல் போன்று இந்தியாவிலும் தாக்குதல் நடத்தப்படும் என காலிஸ்தான் அமைப்பின் தலைவர் குருபத்வந்த் சிங் பன்னூன் பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
பஞ்சாப்பை இந்தியா தொடர்ந்து ஆக்கிரமித்தால்
அதில் பஞ்சாப்பை இந்தியா தொடர்ந்து ஆக்கிரமித்து வந்தால் ஹமாஸ் அமைப்பு நடத்தியது போன்ற ஒரு தாக்குதல் இந்தியாவிலும் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.
Khalistani Leader #GurpatwantSinghPannun Threatens India With '#Hamas-Like Attack'#KhalistaniTerrorist #Khalistani pic.twitter.com/SKhM6cIQP1
— Madhuri Adnal (@madhuriadnal) October 10, 2023
மேலும் பஞ்சாப் முதல் பாலஸ்தீனம் வரை சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளவர்கள் எதிர்வினையாற்றுவார்கள் என்றும் வன்முறை வன்முறையைத் தூண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் மோடி
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் இருந்து பிரதமர் மோடி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்தியா தொடர்ந்து பஞ்சாப்பை ஆக்கிரமித்தால், அதற்கு எதிர்வினை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அப்படி நடந்தால் மோடியும் இந்தியாவும்தான் பொறுப்பாவார்கள் என்றும் பன்னூன் தனது காணொளியில் தெரிவித்துள்ளார்.
காலிஸ்தான் அமைப்பு வாக்குகளை நம்புகிறது என்றும் பஞ்சாப்புக்கு விடுதலை வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தெரிவு இந்தியாவினுடையது என்றும் வாக்குப்பதிவா அல்ல புல்லட்டா என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் எனக்கூறி சுடுவது போன்று சைகை செய்துள்ளார் பன்னூன்.