ஊடகவியலாளர் மீது தாக்குதல் - விரைந்து எடுக்கப்பட்டநடவடிக்கை
Sri Lanka Police
Colombo
Gota Go Gama
Journalists In Sri Lanka
Sri Lanka Anti-Govt Protest
By Sumithiran
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு அருகே இடம்பெற்ற சம்பவத்தை செய்தியாக்கும் பணியில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புபட்டார்கள் என தெரிவித்து விசேட அதிரடிப்படையின் மூன்று முக்கிய அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டனர்.
காவல்துறை விசேட அதிரடிப்படையின் அதிகாரி ரொமேஷ் லியனகே உள்ளிட்ட ஏனைய மூன்று அதிகாரிகளுமே இவ்வாறு உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை மா அதிபர் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
