செம்மணி விவகாரத்தில் நாடகமாடும் அரசு: தேடப்படும் நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பு
செம்மணி விவகாரத்தில் நீதி தேடுகின்ற படிமுறையில் ஒரு மாற்றுப்பரிமாணத்தை பெற வேண்டிய தேவை இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கான நீதி தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கையறு நிலையும் சிறிலங்கா அரசாங்கத்தின் காலம் கடத்தும் செயற்பாடுகள் தொடர்பிலும் நிதானித்து இராஜதந்திர நகர்வுகளை நகர்த்த வேண்டும் என பலதரப்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது.
அதேபோல இந்த விசாரணைகளுக்காக பழைய மற்றும் புதிய வழக்குகள் இணைக்கப்படுமாக இருந்தால் விசாரணைகளுக்காக இளஞ்செழியன் போன்ற ஒரு நீதிபதியின் தேவையும் உணரப்பட்டுள்ளது.
உண்மையில் செம்மணி விவகாரம் நியாயமான முறையில் கையாளப்படுமா ? சர்வதேச நீதி என்பது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மன்றினுடன் நின்றுவிடுகிறாதா ? அந்த அமைப்பு தண்டணை வழங்கும் அதிகாரம் பெற்றதா இப்படியான கேள்விகள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
