இலங்கை வந்த ரஷ்ய பிரஜை மீது தாக்குதல்
Sri Lanka
Russian Federation
Sri Lanka Fisherman
By Sumithiran
வெலிகம பல்பொருள் நிலையத்தில் மது போத்தல் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் ரஷ்ய பிரஜையை தாக்கிய மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த ரஷ்யர் மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மதுபோத்தல் வாங்க நின்றவேளை
இந்த (32) வயதுடைய ரஷ்ய பிரஜை வெலிகம நகரிலுள்ள பல்பொருள் அங்காடிக்கு மது போத்தல் ஒன்றை கொள்வனவு செய்ய சென்றதாகவும், அங்கு வரிசையில் நின்றவேளை மது போத்தல் ஒன்றை கொள்வனவு செய்ய வரிசையில் நின்ற மீனவர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ரஷ்யர் மீனவர் மீது அடித்ததாகவும், மீனவர் கண்ணாடி போத்தலால் தாக்கியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வெலிகம காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி