இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பிரஜைக்கு ஏற்பட்ட துயரம்
Sri Lanka Police
Sri Lanka Tourism
Russian Federation
Death
By Sumithiran
இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கஹந்தமோதர மீன்பிடி துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் மது அருந்திவிட்டு நீந்த முற்பட்டநிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மதுவால் ஏற்பட்ட உயிரிழப்பு
கஹந்தமோதர மீன்பிடி துறைமுகத்தில் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் என மூன்று வெளிநாட்டு பிரஜைகள், மது அருந்திக் கொண்டிருந்த போது, போதையில் நீந்த முயன்ற நபர் உயிரிழந்துள்ளார்.
பின்னர் அவரது உடலை கடலில் இருந்து அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் 47 வயதுடைய ரஷ்ய நாட்டவர் என தெரியவந்துள்ளது. நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்