அரசாங்கத்திற்கு பதிலடி கொடுக்க தயாரான நாமல்: வெளியிடப்பட்ட பகிரங்க எச்சரிக்கை
அரசாங்கத்தின் தொடர்ச்சியான அவதூறு பிரச்சாரத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் தொடர்ச்சியான அவதூறு பிரச்சாரத்தை பொறுத்துக்கொண்டாலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சூழ்நிலையை பொறுத்துக் கொள்ள முடியாது என நாமல் கூறியள்ளார்.
ராஜபக்ச குடும்பம் மீதான அவதூறு
முன்னதாக பல்வேறு கதைகளின் மூலம் அவதூறு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டதாகவும், தற்போது கொள்கலன் சம்பவத்தை வைத்து புதிய அவதூறு பிரசாரம் தொடங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, இவை அனைத்திற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நாமல் ராஜபக்ச எச்சரித்துள்ளார்.
அத்துடன், ஜனவரி மாதத்தில் துறைமுகத்திலிருந்து சோதனையின்றி வெளியேற்றப்பட்ட 323 கொள்கலன்கள் எங்கு உள்ளன என்பது அரசாங்கத்துக்குத் தெரியுமா என்றும், அவற்றில் கொண்டு வரப்பட்ட பொருட்களை வெளிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில், கொள்கலன் விவகாரம் குறித்த சரியான விசாரணை ஒன்றையும் அரசு நடத்தாமல், எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு விடை அளிக்காமல், ராஜபக்ச குடும்பத்தை அவதூறு செய்வதற்கே முயற்சிக்கிறது என்பது வருத்தத்துக்குரியது எனவும் நாமல் ராஜபக்ச மேலும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
