ஹரிணியின் பிரதமர் பதவி தொடர்பில் ரில்வின் வெளியிட்ட அறிவிப்பு
Prime minister
Sri Lankan Peoples
Harini Amarasuriya
Tilvin silva
NPP Government
By Dilakshan
பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்ற கூற்றை மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மறுத்துள்ளார்.
பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி நீண்ட காலமாக ஆதாரமற்ற கூற்றுகளைப் பரப்பி வருவதாகவும், ஆனால் அவை எதுவும் நிறைவேறவில்லை என்றும் ரில்வின் கூட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சியினரின் கனவு
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “முன்னதாக, ஹரிணி அமரசூரிய தனது அமைச்சர் பதவியை இழப்பார் என்று அவர்கள் கூறினர்.
இப்போது அவர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று கூறுகின்றனர். இவை அவர்களின் கனவுகளைத் தவிர வேறில்லை,” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்