உலக வானொலி தினம் : 30ஆவது ஆண்டை நோக்கி பயணிக்கும் ஐபிசி தமிழ் வானொலி
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 13ஆம் தேதி உலகம் முழுவதும் UNESCO அறிவித்துள்ள உலக வானொலி தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தகவலை மக்களிடம் விரைவாகவும் நம்பிக்கையுடனும் கொண்டு சேர்க்கும் வலிமையான ஊடகமாக வானொலி திகழ்கிறது.
இந்த முக்கிய நாளை முன்னிட்டு, ஐ.பி.சி தமிழ் வானொலி தனது 29 ஆண்டுகால சிறப்பான பயணத்தை நிறைவு செய்து, 30ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.
1997ஆம் ஆண்டு, பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழர்களுக்கான குரலாக ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.சி தமிழ் வானொலி, இன்று எல்லைகளைத் தாண்டிய ஒரு பெரும் ஊடக வலையமைப்பாக வளர்ச்சி பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் ஒரு வானொலியாகத் தொடங்கிய இது, காலப்போக்கில் தொலைக்காட்சி, இணையதளம், சமூக வலைத்தளங்கள் மற்றும் வலையொளி தளங்கள் ஆகியவற்றின் மூலம் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களை இணைக்கும் பாலமாக உருவெடுத்துள்ளது.
ஈழத்தமிழர்களுக்கான உறவுப்பாலமாக மட்டுமன்றி, வரலாற்றை அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தும் பொறுப்புணர்வுடனும், தமிழ் தேசிய நிலைப்பாட்டை முன்னிறுத்தியும் தனது ஊடகப் பணியை தொடர்ந்து ஆற்றி வருகிறது.
ஐ.பி.சி தமிழ் வானொலியில் செய்தி, நிகழ்ச்சி, கலாச்சாரம், அரசியல் மற்றும் சமூக அக்கறைகள் ஆகிய அனைத்துத் துறைகளிலும் உண்மை மற்றும் உறுதியை தளமாகக் கொண்டு பணியாற்றி வருகிறது.
29 ஆண்டுகளின் நம்பிக்கையும் அர்ப்பணிப்பும், 30ஆவது ஆண்டில் புதிய இலக்குகள் மற்றும் விரிவாக்கங்களுடன் மேலும் வலுப்பெறுகின்றன.
உலக வானொலி தினத்தின் அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையில், ஐபிசி தமிழ் வானொலி தனது ஊடகப் பயணத்தை தொடர்ந்து மக்களுடன் இணைந்தே முன்னெடுத்து செல்கிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |