வெடுக்குநாறி மலை சிவராத்திரி வழிபாடு விவகாரம்: ரவிகரன் எம்.பி அழுத்தம்

Sri Lankan Tamils Sri Lanka Parliament Vavuniya Hinduism Thurairajah Raviharan
By Independent Writer Feb 13, 2026 09:42 AM GMT
Report
Courtesy: சண்முகம் தவசீலன்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவமக்கள் சுதந்திரமாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ( T. Raviharan) வலியுறுத்தியுள்ளார்.

இம்முறை வெடுக்குநாறி மலையில் சைவமக்கள் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படுமென வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் உபாலி சமரசிங்கவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 13.02.2026 இன்று இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

T20 போட்டிகளுக்கு சிக்கல்...! மீண்டும் உருவாகும் குறைந்த அழுத்த தாழ்வு பகுதி

T20 போட்டிகளுக்கு சிக்கல்...! மீண்டும் உருவாகும் குறைந்த அழுத்த தாழ்வு பகுதி

வழிபாடுகளில் இடையூறுகள்

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வெடுக்குநாறி மலையில் கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற சிவராத்திரி தின வழிபாடுகளில் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

வெடுக்குநாறி மலை சிவராத்திரி வழிபாடு விவகாரம்: ரவிகரன் எம்.பி அழுத்தம் | Vedukkunaari Malai Temple Shivaratri Pooja

குறிப்பாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் மீது காவல்துறையினரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்தோடு பக்தர்களுக்குரிய குடிநீரை ஆலயப்பகுதிக்குள் எடுத்துச்செல்வதற்குத் தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இதனால் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்கதர்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்திருந்தனர். 

எனவே இம்முறை சிவராத்திரி தினவழிபாடுகளுக்கு அவ்வாறான இடையூறுகள் ஏற்படுத்தக்கூடாது.

யாழ். மாநகர சபையை முற்றுகையிட்டு வெடித்த போராட்டம்

யாழ். மாநகர சபையை முற்றுகையிட்டு வெடித்த போராட்டம்

மக்கள் வழிபடுவதற்குரிய வழி

சைவமக்கள் சுதந்திரமாக வழிபடுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும். அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான சைவமக்களின் வழிபாட்டுரிமை பாதுகாக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.

வெடுக்குநாறி மலை சிவராத்திரி வழிபாடு விவகாரம்: ரவிகரன் எம்.பி அழுத்தம் | Vedukkunaari Malai Temple Shivaratri Pooja

இந்நிலையில் இம்முறை தடைகளின்றி சுதந்திரமாக மக்கள் வழிபடுவதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படுமென வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தி சார்பான நாடாளுமன்ற உறுப்பினர்களால் பதில் வழங்கப்பட்டிருந்தது.

மேலும் சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தருகின்ற அடியவர்களுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு வவுனியா வடக்கு பிரதேசசபைத் தவிசாளருக்கு இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

வாகனங்களின் விலையில் ஏற்படும் மாற்றம்! அறிமுகப்படுத்தப்படும் புதிய வரி

வாகனங்களின் விலையில் ஏற்படும் மாற்றம்! அறிமுகப்படுத்தப்படும் புதிய வரி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...   


ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022