எல்ல கோர விபத்து: சிகிச்சையளித்த வைத்தியருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை!
எல்ல பிரதேசத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்காற்றிய பதுளை போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பாலித ராஜபக்ச தனக்கு எதிராக ஒழுகாற்று விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.
2022 ஆம் ஆண்டில் ஊடகங்களுக்கு மருந்துக் குறைப்பாடு குறித்துச் செய்தியளித்ததற்காகவே இந்த விசாரணை நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்ல விபத்தில் காயமடைந்தவர்ளுக்கு சிகிச்சையளிக்கும் போது தானும் காயமடைந்ததாகவும் அதனால் இன்று நன்றாக சட்டை கூட அணிய முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எல்ல விபத்தில் காயமடைந்தவர்கள்
இவ்வாறானதொரு பின்னணியில், தனக்கு ஒழுக்காற்று விசாரணைக்காக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் பாலித குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை, எல்ல விபத்தில் காயமடைந்த சிறுமி ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் மொத்தம் 17 பேர் காயமடைந்து அவர்களில் பலர் ஏற்கனவே வீடு திரும்பியுள்ளதாகவும் நால்வர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
