வழமைக்கு திரும்பிய கடவுச்சீட்டு விநியோகம் : வெளியான அறிவிப்பு
புதிய இணைப்பு
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழிநுட்ப கோளாறு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய அலுவலகங்களில் உள்ள தரவுக் கட்டமைப்பு வழமைக்கு திரும்பியுள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே சாதாரண மற்றும் ஒருநாள் சேவையின் அடிப்படையிலான கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் விசா விநியோக சேவைகள் என்பன வழமை போல் இடம்பெறுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பில் நேற்று (13) காலை முதல் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டிருந்ததன் காரணமாக கடவுச்சீட்டு விநியோகம் உள்ளிட்ட சேவைகள் தற்காலிகமாக தடைப்பட்டிருந்தன.
இந்தநிலையில் குறித்த சேவைகளை பெறச் சென்றவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள இருப்பவர்களுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு (Ministry of Public Security) அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய அலுவலகங்களுக்கு சேவை பெறுவதற்காக பொதுமக்கள் இன்று (13) வருகைத் தருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு இன்னும் சீர்செய்யப்படாமையினால், பொதுமக்கள் இந்த அறிவுறுத்தலை பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
அத்துடன் சாதாரண சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் மீண்டும் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று (12) வருகை தந்த விண்ணப்பதாரர்களுக்கு, திங்கட்கிழமை சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |