தேசபந்துவின் காவல்துறைமா அதிபர் நியமனத்திற்கு எதிரான மனு : அடுத்த வருடம் விசாரணை
தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) காவல்துறை மா அதிபராக நியமித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எடுத்த முடிவு அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிப்பதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த மனுக்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.
இந்த மனுக்கள் இன்று (08) பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன் அழைக்கப்பட்டது.
09 மனுக்கள்
இதன்போது குறித்த மனுக்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது.
பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட தரப்பினரால் 09 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
