பிரான்ஸ் அரசாங்கம் இன்று கவிழும்! அரசியல் நெருக்கடியில் நாடு
பிரான்சில் பிரதமர் பிரான்சுவா பைய்ருவின் அரசாங்கம் இன்று மாலை கவிழ்கப்பட்டு நாட்டில் பெரும் அரசியல் கொதிநிலை ஏற்படக்கூடுமமென எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் கடந்த வருடம் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்தக்கட்சியும் பெரும்பான்மை பலத்தை நாடாளுமன்றத்தில பெறாததால் சிறுபான்மை அரசாங்கம் அமைந்தால் அன்று முதல் அந்த நாடு அரசியல் முட்டுக்கட்டையில சிக்கியுள்ள நிலையில் புதியதொரு நெருக்கடியாக ஆட்சி வீழும் நிலை தோன்றியுள்ளது.
இதனால் பிரான்சின் ஐந்தாவது குடியரசின் வரலாற்றில் முதல்முறையாக, நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை கோரும் முதலாவது பிரதமராக மாறும் பிரான்சுவா பைய்ரூ தனது அரசியல் தலைவிதியை இன்று தானே தீர்மானித்து வீடுசெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்ரோனின் தீர்மானம்
அரசாங்கம் கோரும் நம்பிக்கை வாக்குகளை ஒருபோதும் அதற்கு வழங்கப்போவதில்லையென ஏற்கனவே அனைத்துகட்சிகளும் அறிவித்துள்ளதால் மூன்று ஆண்டுகளில் ஐந்தாவது பிரதமர் ஒரு நியமிக்கப்படுவதற்கான நிலை எழுந்துள்ளது.
பிரதமர் தனது வரவுசெலவுத்திட்டத்தை கடந்த ஜுலையில் முன்வைத்ததன் இந்த நெருக்கடி ஆரம்பித்த நிலையில் இன்று அவரது அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அது தூக்கியெறியப்பட்ட பின்னர் அரச தலைவர் இமானுவேல் மக்ரோன் ஒரு புதிய பிரதமரை நியமிக்கவேண்டும் அல்லது நாடாளுமன்றத்தை கலைக்கவேண்டிய நிலை உருவாகும்.
புதிய பிரதமர்
மக்ரோனை பொறுத்தவரை அவர் ஏற்கனவே, நாடளுமன்ற கலைப்பும் இல்லை தனது பதவி விலகலும் இல்லையென அழுத்தமாக குறிப்பிட்டு அரசியல் அட்டவணைப்படி ஒட்டியிருக்க விரும்புவதால் புதிய பிரதமர் ஒருவரை அவர் பெயரிடக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தின் வீழ்ச்சி, அரச தலைவர் அடுத்து எடுக்க வேண்டிய நகர்வு, நாடாளாவிய ரீதியில் இடதுசாரிகள் அறிவித்துள்ள முற்றுகைப் பேராட்டம்; மற்றும் பொதுப்பணிப்புறகணிப்பு போராட்டம் ஆகியவற்றால் பிரான்ஸ் இந்தவாரம் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மிகவும் கொந்தளிப்பான காலகட்டத்துக்குள் நுழைவது உறுதியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
