போக்குவரத்துச் சபை சாரதி மீது தாக்குதல்..! ஸ்தம்பிதமடைந்த போக்குவரத்து சேவை

Sri Lanka Police Sri Lanka Bus Strike
By Kiruththikan Dec 28, 2022 09:31 AM GMT
Report

முரண்பாடு

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தை செலுத்தி வந்தவர்களுக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சுவேலி நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தை செலுத்தி வந்தவர்களுக்கும் இடையில் இன்று புதன்கிழமை (28) காலை முரண்பாடு ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் சில மணித்தியாலங்கள் தனியார் பேருந்து ஊடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.

இலங்கைப் போக்குவரத்துச் சபை சாரதி மீது அச்சுவேலிப்பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன், இது தொடர்பாக அச்சுவேலி காவல் நிலையத்தில் இலங்கைப் போக்குவரத்துச் சபை சாரதியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அச்சுவேலி தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனரை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்து சென்றமைக்கு எதிர்ப்பினை தெரிவித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் அச்சுவேலி காவல் நிலையத்திற்கு முன்னால் தனியார் பேருந்துகளை நிறுத்தி தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

காவல்துறையில் முறைப்பாடு

போக்குவரத்துச் சபை சாரதி மீது தாக்குதல்..! ஸ்தம்பிதமடைந்த போக்குவரத்து சேவை | Attack On Sri Lankan Transport Board Driver

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று(28) காலை யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்து கொண்டிருந்த 750 இலக்க வழித்தடம் பேருந்து சாரதியினை அச்சுவேலி பேருந்து நிலையத்தில் நின்ற ஒருவர் தாக்கியுள்ளார்.

இதனை அடுத்து குறித்த இ.போ.ச. பேருந்து காவல் நிலையம் எடுத்து செல்லப்பட்டு பாதிக்கப்பட்ட சாரதியினால் அச்சுவேலி காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகத்தில் இரண்டு தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றிருந்தனர்.

காவல் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் குறித்த நபர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து தனியார் பேருந்து சேவைகள் வழமை போல் இடம்பெற ஆரம்பித்துள்ளன.

தொடர்ச்சியாக இலங்கைப் போக்குவரத்துச் சபையினருக்கும் தனியார் பேருந்தை செலுத்துபவருக்கும் இடையில் ஏற்பட்ட போட்டியால் வேகமாக பயணித்து இருதரப்புக்கும் இடையில் அடிக்கடி முறுகல் ஏற்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

பேருந்து சாரதிகள் பயணிகளின் உயிரைப் பணயம் வைத்து தமக்குள் போட்டி போட்டு ஓடுவதனைத் தடுத்து நிறுத்துவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015