பரந்தன் தொடருந்து நிலையத்திற்குள் புகுந்து குண்டர்கள் தாக்குதல்..!
Sri Lankan Tamils
Sri Lankan Peoples
By Kiruththikan
கிளிநொச்சி - பரந்தன் தொடருந்து நிலையத்திற்குள் புகுந்து குண்டர்கள் தாக்குதல் நடத்தியமை காரணமாக ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (11.04.2023) பதிவாகியுள்ளது.
பரந்தன் புகையிரத நிலையத்தில் வைத்து மதுபானம் அருந்திய குழுவினரிடம் அப்பகுதியில் மதுபானம் அருந்த வேண்டாம் என ஊழியர்களால் கூறப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தின் போது உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை காவல்துறையினர் கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி