இஸ்ரேலில் அதிகாலைவேளை ஆயுததாரிகளின் துப்பாக்கி சூட்டில் இடம்பெற்ற அனர்த்தம்
Israel
Israel-Hamas War
By Sumithiran
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் ஆயுததாரிகள் மூவர் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இஸ்ரேலியர் ஒருவர் பலியாகியதுடன். மேலும் எட்டு பேர் காயமடைந்தனர்.
அதிகாலை 7.30 மணிக்கு போக்குவரத்து குறைவாக இருக்கும்போது சோதனை சாவடிக்கு அருகில் சென்ற கார்களை நோக்கி மூவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிரதான நெடுஞ்சாலையில்
கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிரதான நெடுஞ்சாலையில் இந்த தாக்குதல் நடந்ததாகவும் மூவரில் இருவரை பாதுகாப்பு காவலர்கள் சுட்டு கொன்றதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தப்பிச் சென்ற மூன்றாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடுமையான போர்
இஸ்ரேல்- ஹமாஸ் போர் ஒக்டோபர் 7-ம் திகதி தொடங்கியது முதல் இரு தரப்புக்கும்இடையே கடுமையான போர் நடைபெற்று வருவதும் இதில் பலர் கொல்லப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி