திருமலையில் சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி : தடுத்து நிறுத்திய மக்கள்
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பகுதியில் சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
கும்புறுபிட்டி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கடற்கரையை அண்டிய தேவிக்கல் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் ஒப்பந்தக்காரர்கள் இன்று (05) கட்டிடம் கட்டுவதற்காக துப்பரவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமிழரசுக் கட்சியின் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட கிராம இளைஞர்கள் இடத்திற்குச் சென்று வேலைகளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கட்டிடம் அமைக்க முயற்சி
அத்துடன் பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதேச செயலாளரின் அனுமதியில்லாமல் தொல்லியல் இடமென்று கூறிக் கொண்டு கட்டிடம் அமைக்க முயற்சிப்பதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதென மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை வார இறுதி நாட்களில் இவ்வாறான வேலைகள் இடம்பெறுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதி தொல்லியல் இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இங்கே பழைய விகாரை இருந்ததாகவும் அதனை அபிவிருத்தி செய்வதற்காக இப்பகுதியில் இரண்டு அறைகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்காக முயற்சித்ததாக தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening