வீழ்ச்சியடையும் ட்ரம்பின் செல்வாக்கு ! ஈரான் போர் தொடர்பில் ஜே.டி. வான்ஸ் வெளியிட்ட அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான சண்டையை ஒரு போர் என்று குறிப்பிட முடியாது என்றும், இந்த மோதல் எப்போது முடிவடையும் என்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை வழங்க முடியாது என்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
இடைக்காலத் தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில், இந்த மோதல் ஏழாவது மாதத்தை எட்டியுள்ளதால் ட்ரம்ப் நிர்வாகம் எதிர்கொள்ளும் சவால்களை குறைக்க அவர் இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைதியான சூழலுக்குப் பிறகு இந்த வாரம் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன. தற்போதைக்கு அமைதியை ஏற்படுத்த எவ்வித இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை.
ட்ரம்பின் செல்வாக்கு
இந்தப் போர் காரணமாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு சரிந்துள்ளதுடன், எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளதால் வரும் நவம்பர் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு இது பெரும் சவாலாக மாறியுள்ளது.

Image Credit: CNN
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் பேசிய வான்ஸ், ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்தை சீராக வைத்திருக்க அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டினார்.
மேலும், அமெரிக்கா தனது முக்கிய ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதால் இதை 'போர்' என்று கூற முடியாது என்றும், தற்போது தீவிரமான தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோதலின் முடிவு
இருப்பினும், மத்திய கிழக்கில் அமெரிக்கா 50,000-க்கும் மேற்பட்ட வீரர்களையும், 20 போர்க்கப்பல்களையும் நிலைநிறுத்தியுள்ளது.

Image Credit: defensenews
வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரான் நிறுத்தும் வரை இராஜதந்திர பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று கூறிய வான்ஸ், இந்த மோதல் எப்போது முற்றிலுமாக முடிவுக்கு வரும் என்பதைக் கணிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20