சாணக்கியனை தாக்க முற்பட்ட மொட்டு எம்.பி
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன என்னை அச்சுறுத்தியதோடு தாக்க முற்பட்டார் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம்(7) நாடாளுமன்ற அமர்வுகளின் போது, தனது சிறப்புரிமையை மீறியமைக்காக வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தன்னை அவர் அச்சுறுத்தியதோடு நாடாளுமன்றத்தில் பிரதமரின் அலுவலகம் செல்லும் வழியில் நீர் எவ்வாறு எமது நாட்டின் பிரதமரை சந்திக்கலாம் என்று கூறி தாக்க முற்பட்டதாக தெரிவித்தார்.
இவ்வாறான இனவாதிகள் நாட்டில் இருக்கும் வரை எவ்வாறு எமது மக்களுக்கான நீதி கிடைக்கும் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிருக்கு உத்தரவாதம் இந்த நாட்டில் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாணக்கியன் தேசத்துரோக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன நாடாளுமன்ற அமர்வுகளில் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 16 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்