அவுஸ்திரேலிய விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு
அவுஸ்திரேலியா - கேன்பெர்ரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், அங்கிருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விமான நிலைய முனையத்தில் திடீரென புகுந்த மர்ம நபர் ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதனையடுத்து, மத்திய காவல்துறையினர் விமான நிலையத்தில் இருந்த பயணிகளை பாதுகாப்புடன் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
விமான நிலையம் மூடப்பட்டது

இந்தத் தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் கேன்பெர்ரா விமான நிலையத்தில் உள்ள சுவர்களில் குண்டுகள் துளைத்துள்ளன. ஜன்னல் கண்ணாடிகளிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
ஆயுதம் பறிமுதல்

சம்பவம் தொடர்பில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்த ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது யாரையும் விமான நிலையத்திற்கு வரவேண்டாம் என காவல்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.